Home » அமைதிப் புறா
கிச்சன் கேபினட்

அமைதிப் புறா

எலிசபெத் கோர்ட்ரைட் மன்றோ

 எலிசபெத் கோர்ட்ரைட் மன்றோ 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பலரின் கனவுகளையும் கதைகளையும் சுமந்து நிற்கும் இடம். அங்கே வாழ்ந்த முதல் பெண்மணிகள் சிலருடைய வாழ்க்கையோ வரலாற்று நூல்களின் பக்கங்களில் இருந்தே நீக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் விடுகின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எலிசபெத் கோர்ட்ரைட் மன்றோ (Elizabeth Kortright Monroe). அதிபர் ஜேம்ஸ் மன்றோவின் துணைவி. வெறும் அதிபர் மனைவி என்ற அடையாளத்தோடு நின்றுவிடாமல், ஃபிரெஞ்சுப் புரட்சியின் நெருப்பில் கட்டாய மரண தண்டனையிலிருந்து உயிர்களைக் காப்பாற்றிய தீரமுள்ள பெண்மணி அவர்.

எலிசபெத் கோர்ட்ரைட், 1768ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தார். அவரது தந்தை லாரன்ஸ் கோர்ட்ரைட் (Lawrence Kortright) அந்தக் காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகர். கப்பல் வணிகம் செய்தவர். நிலங்கள் வாங்கியவர். இப்போது டெலாவர் கவுண்ட்டி என்று அழைக்கப்படும் பகுதியை அவர் வாங்கி விற்ற நிதியில்தான் ‘கோர்ட்ரைட்’ என்ற ஊரே உருவானது. அமெரிக்க உரிமைப் போரின்போது அவர் சில கப்பல்களுக்கு உரிமையாளராக இருந்தார்.

ஆனால் இந்தச் செல்வச் செழிப்பிலும் துயரம் வந்து தாக்கியது. ஒரு பயங்கரமான தீ விபத்தில் அவர்களது வீடு கருகியது. அந்த விபத்தில் பலருடைய வீடுகளும் எரிந்து சாம்பலாயின. அதற்குத் தீயணைப்புப் படைகளை இங்கிலாந்து  சரிவர நிர்வகிக்காததே காரணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!