பிரிக்க முடியாதது எதுவோ? இந்த வினாவுக்கு, முன்னொரு காலத்தில் ‘அமெரிக்காவும் ஐரோப்பாவும்’ என்று உறுதியாகக் கூறிடலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு சொல்ல இயலாது.
ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்துள்ளது. அண்மைக் காலமாக அதில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் முதல் முறை பொறுப்பேற்றவுடன் சிறிய அளவில் தொடங்கிய விரிசல், இப்போது இன்னும் பெரிதாகியுள்ளது.
அதன் காரணமாக ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவின் மீதிருக்கும் நம்பிக்கை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. வெறும் பதினொரு சதவீத ஐரோப்பியர்கள் மட்டுமே அமெரிக்காவைத் தங்களுடைய நட்பு நாடு என்று கருதுகின்றனர். ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (European Council on Foreign Relations) என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இம்முடிவு வெளியாகியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் அந்த நம்பிக்கை பதினாறு சதவீத மக்களிடம் இருந்தது. 2024ஆம் ஆண்டின் இறுதியில் அதுவே இருபத்திரண்டு சதவீத ஐரோப்பியர்களிடம் இருந்துள்ளது.















Add Comment