Home » செய்யறிவுக்கு வரி?
கணினி

செய்யறிவுக்கு வரி?

நம்மில் பலரும் சமீபத்தில் புதிதாக மடிக்கணினியோ அலைபேசியோ வாங்க எண்ணியிருப்போம். அதன் பொருட்டு விற்பனைத் தளங்களினுள்ளே உலாவும்போது அவற்றின் சமீபத்திய விலை உயர்வைக் கவனித்திருப்போம். இதனை கோவிட் காலத்துக்குப் பிறகான டிஜிட்டல் பயன்பாட்டின் உச்சத்தின் பின்விளைவாக மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது.

2026இல் ஒரு தொடக்க நிலை மடிக்கணினியின் சராசரி விலை முப்பதாயிரத்தைக் கடந்து நாற்பத்து ஐந்தாயிரத்தில் நிற்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் முப்பதாயிரம் ரூபாய்க்குள்ளாகக் கிடைத்த மடிக்கணினிகள் இப்போது இல்லை. கணினியோ, அலைபேசியோ அவற்றின் வேகத்துக்கும், நுட்பமான செயல்பாடுகளுக்குமான அடிப்படையான பொருள் சிப் (Chip).

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான வர்த்தகப் போர் மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள், உலக அளவில் செமி கண்டக்டர் சந்தையைப் பெரிதும் பாதித்துள்ளன. அதிநவீன சிப் தொழில்நுட்பங்கள் சீனாவுக்குச் செல்வதை அமெரிக்கா தடை செய்துள்ளது. Nvidia நிறுவனத்தின் புதிய ‘Blackwell’, ‘Rubin’, AMD நிறுவனத்தின் ‘MI350X’ போன்ற அதிநவீன சிப்கள், சீன நிறுவனங்களின் வெளிநாட்டுக் கிளைகளுக்குக் கூடக் கிடைக்காதவாறு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது விநியோகச் சங்கிலியில் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!