மஞ்சு. ஊடகத்துறையில் பணிபுரியும் ஒரு பெண். ஐந்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருக்கலாம். அவருக்கு வாட்ஸப்பில் அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து ஓர் அழைப்பு. அது ஒரு கனேடிய இலக்கம். ஆனால் அவருக்கு உடனடியாக அதை நினைவுபடுத்த முடியவில்லை. அழைத்தவர் ஆங்கிலத்தில்தான் பேசினார்.
தன்னை தமிழ் ஊடக ஒன்றியத்தின் உறுப்பினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் அழைத்தவர். மஞ்சு தனக்கு இருந்த வேலைப்பளுவில் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. என்றாலும் தானும் ஊடகத்துறை சார்ந்தவர் என்று அந்த நபர் சொன்னதால் வேறு எதையும் ஆராயவும் அவள் மனத்துக்குத் தோன்றவில்லை.
இரவு ஸூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார். உங்கள் வாட்ஸப்புக்கு ஸூம் இணைப்பை அனுப்பி உள்ளோம். அதில் உள்ள ஆறு இலக்கக் குறியீட்டைச் சொல்லுங்கள் என்றார். மஞ்சு தனது வாட்ஸப் அரட்டைக்கு வந்திருந்த குறியீட்டைச் சொன்ன பிறகு அவர் நன்றி சொல்லி அழைப்பைத் துண்டித்தார். சில நொடிகளில் ‘உங்கள் வாட்ஸப் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளது’ என்ற நோட்டிஃபிகேஷனைப் பார்த்த மஞ்சு திகைத்துப் போனார். அதன் பின்னரே தனக்கு அனுப்பப்பட்ட ஆறு இலக்கக் குறியீடு தனது வாட்ஸப்பை வேறு ஃபோனில் லாக்-இன் செய்வதற்கானது என்பதை அவர் உணர்ந்தார்.















Add Comment