89. பாண்டமும் குயவனும்
குருநாதர் உன் பதிலுக்காகக் காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இணக்கமான புன்னகையுடன் நாயனார் சொன்னார். ஆனால், அதுவரை உற்சாகமாகவும் ஆரவாரமாகச் சிரித்தபடியும் பேசிக்கொண்டிருந்த சார்வாகன் சட்டென்று முகம் சுருங்கிப் போனான்.
என்ன பதில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? தவிர, நீங்கள் எதிர்பார்ப்பதை மட்டும் செய்வதற்கு நான் உங்கள் ஊழியனோ சேவகனோ அடிமையோ அல்ல. சொல்லப் போனால் புவியில் எவனுக்கும் இதுவரை நான் அடிபணிந்ததில்லை. அதற்கொரு அவசியம் வந்ததுமில்லை.
அவன் பேசி முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு நாயனார் மீண்டும் அமைதியாகச் சொன்னார்,
அடிமைத்தனமென்பது சுய சிந்தனையற்றவன் மனத்தில் உதிப்பது சார்வாகனே. பகுத்தறிந்து உரையாடத் தெரிந்த உன்னை அடிமையாக இருத்திக்கொள்ளக்கூட யாரும் விரும்ப மாட்டார்கள்.
பிறகு ஏன் அவன் அப்படிக் கேட்டான் என்று அவனையே கேட்டுச் சொல்.
நீயே கேட்கலாம் அல்லவா?
அவன் என் எதிரில் வந்து நின்றாலொழிய இனி நான் பேசப் போவதில்லை.









Add Comment