இந்தியாவும் நேபாளமும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு கேள்வியில் உடன்படவில்லை: காளி நதி எங்கே பிறக்கிறது?
சாதாரணமாகத் தோன்றும் இந்தக் கேள்விதான் காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய இமயமலைப் பகுதிகளின் நிலப்பரப்பு உரிமையை இந்தியாவுக்கோ நேபாளத்துக்கோ நிர்ணயிக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடத் தொடங்கும் முன்பு, முதலில் இமயமலையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இப்பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரம் மீட்டர் உயரத்தில் மரங்கள் வளரக்கூடிய எல்லை முடிந்துவிடுகிறது. அதன் மேல் விரிவது பாறைகள், பனிப்படலங்கள் மற்றும் பருவங்களுக்கேற்ப மாறும் நீர்வழிகள் கொண்ட நிலப்பரப்பு. ஆண்டின் பெரும்பகுதி உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள், கோடைக்காலத்தின் சில வாரங்களில் மட்டுமே நீரை வெளியேற்றுகின்றன. அந்த நீர் ஒரே இடத்திலிருந்து தோன்றுவதில்லை. பல இடங்களில் பனியின் அடியிலிருந்து கசிகிறது. சில ஓடைகள் ஒன்றோடொன்று இணைகின்றன; சில மறைந்து மீண்டும் தோன்றுகின்றன.
இமயமலையில் ஒரு நதியின் பிறப்பிடத்தை அடையாளம் காண்பது, சமவெளிகளில் ஒரு நதியின் தொடக்கத்தைக் கண்டுபிடிப்பதைவிடச் சிக்கலானது. இந்தச் சிக்கல்தான் இந்தியா–நேபாள எல்லையின் நீண்டகால விவாதங்களில் ஒன்றின் மையமாக உள்ளது.















Add Comment