Home » உரி – 167
உரி • நாள்தோறும்

உரி – 167

167. தராததும் பெறாததும்

சார்வாகனின் சொற்களிலும் உடல் மொழியிலும் அன்றைக்கு நான் கண்ட மாற்றம் மிகவும் புதிதாக இருந்தது. தான் நம்பாத, நம்ப விரும்பாத ஒன்றனை வெளிப்படையாக அறிவிக்கும்போது தனது சொற்களில் கவனமாகச் சிறிது கடுமை ஏற்றுவான். மேற்கொண்டு அது குறித்துச் சல்லாபம் செய்ய வேண்டாமென எதிரில் இருப்பவர் முடிவு செய்யும் விதமாகவே அது இருக்கும்.

ஆனால் வேட்டனின் சாகாநிலை குறித்த விவரங்களைக் கருவூரார் சொல்லி முடித்தபோது அவன் ஒரு சிறிய புன்னகையைக் கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக, மிகவும் தணிந்த குரலில், தன்மை கூடிய சொற்களில் இவ்வாறாகச் சொன்னான்,

நல்லது ஐயனே. நீங்கள் ஒரு கதை சொன்னீர்கள். அவனது சாகாநிலைக்கு நீங்கள் காரணமில்லை என்பது விளங்கியது. எனக்கு அது போதும். ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எவனோ ஒரு வட நாட்டு மன்னன் உயிரோடு திரிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் அவன் பல்லவ தேசத்துக்கு வந்து வேட்டனைத் தேடிப் பிடித்து வரமளித்துவிட்டுச் சென்றான் என்பதையும் என்னால் ஏற்க இயலவில்லை.

அப்படியா என்று கருவூரார் கேட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!