2024 ஜூன் மாதம் தைவானில் கம்ப்யூடெக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்ற நேரம். பல நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்களுக்காகப் பிரத்தியேக மது விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குடித்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு சீனப் பெண் ‘இருங்க, நான் ஜென்சனை வரச் சொல்கிறேன்’ என்று தொலைபேசியில் யாருடனோ பேசினார். கூட்டம் சலசலத்தது. இவர் சொல்வது அவரைத்தானா? இவருக்கு அவருடன் நேரடித் தொடர்பு உள்ளதா?
இப்படி அனைவரும் கற்பனை செய்து கொண்டிருந்த நேரத்தில், கதவுகளைத் திறந்து என்ட்ரி கொடுத்தார் ஜென்சன் ஹுவாங். என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. அந்தப் பெண் சென்று அவர் அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் மது அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் அந்தப் பெண் சமூக வலைத்தளங்களில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ஜென்சனுடனான தனது நட்பைக் காட்டிக் கொண்டார். மீண்டும் 2025 மே மாதம், அதே மதுக்கூடத்திலிருந்து அதே பெண்ணுடன் வெளியே வந்தார் ஜென்சன். காத்திருந்த ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பேட்டி முடியும் வரை அவர் பின்னாலேயே காத்திருந்தார் அந்தப் பெண்.















Add Comment