இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இரு வாரங்களாகியும் யார் ஆட்சியமைப்பது என்று நீடித்த இழுபறி இப்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.
யஷார் கட்சியின் தலைவர் காடி ஐஸன்காட் தலைமையில் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் அதிபர் ஐசக் ஹெர்ஸாக். இது பெஞ்சமின் நெதன்யாகு விரும்பாத முடிவு. அவருடைய கூட்டணியிலிருக்கும் அரபு வெறுப்பாளர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்துள்ள முடிவு.
நெதன்யாகு, இஸ்ரேலின் மிக நீண்டகாலப் பிரதமர். பத்தொன்பது வருடங்களாக அப்பதவியில் இருப்பவர். தற்போது அதிகாரத்தைப் பறி கொடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். எப்படியேனும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
நடந்து முடிந்த கெனசெட் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நூற்றிருபது இடங்கள் கொண்ட கெனசெட் சபையில், குறைந்தபட்சம் அறுபத்தொரு உறுப்பினர்களைப் பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரலாம்.















Add Comment