Home » Archives for நந்தினி கந்தசாமி

Author - நந்தினி கந்தசாமி

Avatar photo

உலகம்

மூடு கோபுரத்தை!

BAPS என்ற மதக் குழுவின் வருகையால் ஈஃபிள் கோபுரத்தின் ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி, உலக அதிசயத்துக்கு ஒரு நாள் பூட்டுப் போட்டுவிட்டார்கள். உலகம் முழுவதும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் என்ன நடந்தது? முதலில் BAPS என்றால் யாரென்று பார்க்கலாம். கன்ஷம் பாண்டே என்பவர் 19ஆம் நூற்றாண்டில்...

Read More
இயற்கை

விலை மதிப்பற்ற வாந்தி

ஒரு சுமாரான மீன்பிடி காலம். தேவையான அளவு மீன்களைப் பிடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தாய்லாந்து மீனவர் நரோங் பட்சேராஜ். வழியில் ஏதோ பாறை போல மிதக்க, வலையைப் போட்டார். முப்பது கிலோ எடையுள்ள, வழவழப்பான பிசினைப் போன்ற ஒரு பொருள் அகப்பட்டது. கடலிலிருந்து வந்தவுடன் நேராக அதை பிரின்ஸ் ஆஃப்...

Read More
அறிவியல்

600 கிமீ ஆழத்தில் நீர்

நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். விஞ்ஞானிகள் மனிதர்களின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் பூமியை விரைவில் வாழத்தகுதி அற்ற இடமாக்கி விடுவார்கள் என்று வேறு கிரகங்களில் நீர் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் உள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில், சூரியக்...

Read More
சாகசம்

மகத்தான மலை மனிதர்

புவியில் மொத்தம் பதினான்கு சிகரங்கள்தான் 8,000 மீட்டர்களுக்கு மேல் உயரமாக உள்ளன. முதன்முதலாக இந்தப் பதினான்கிலும் ஏறிய இத்தாலியைச் சேர்ந்த மலையேற்ற வீரர், இந்தச் சாதனையை நிகழ்த்த பதினாறு வருடங்கள் எடுத்துக்கொண்டார். 1986இல் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட 2013 வரையுமே இது...

Read More
இந்தியா

அஸ்ஸாம் வெள்ளம்: எல்-நினோ தாக்கமா?

சிவசாகர் மாவட்டத்தில் ஹோலாங் கடோனி என்ற கிராமம், மேலை அஸ்ஸாம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது. கடந்த ஜூலை 19 அன்று அண்டை மாநிலமான நாகாலாந்தின் மலைப்பகுதிகளிலும், அஸ்ஸாமிலும் வரலாறு காணாத மழை. இப்பகுதிகளில் ஓடும் திக்ஹோ, தாரிகா நதிகள் நிரம்பி வழிந்தோடின. மேலும் நீர் பெருக்கெடுத்ததால் உடைப்பு...

Read More
சமூகம்

என்று மாறும் இந்த நிலை?

ஐம்பது வருடங்களுக்கு முன் ‘முதலாளி’ என்றாலே ஆண்கள்தான். ‘முதலாளியம்மா’ உள்ளதே என்று கேட்காதீர்கள். அது முதலாளியின் வீட்டுக்காரம்மாவை குறிப்பதற்கு மட்டுமே. எவ்வளவு சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி ஆண் வாரிசுதான் அவர்களுக்குப் பின் அதைப் பராமரிக்க வேண்டும். ஆசைக்குப்...

Read More
கல்வி

பச்சையப்பாஸ் இனி பச்சையம்மாஸ்!

சென்னையில் 184 வருடப் பாரம்பரியம் மிக்க கல்லூரி பச்சையப்பாஸ். ஊரில் எத்தனை கல்லூரிகள் இருந்தாலும், பச்சையப்பாஸ் கல்லூரியைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை இந்தக் கல்லூரியின் மாணவர்தான். பல பிரபலங்கள் இந்தக் கல்லூரியில் படித்துள்ளனர். எல்லா வருடமும்...

Read More
உலகம்

சைக்கிள் தேசம்

கச்சா எண்ணெய்த் தட்டுப்பாட்டின் காரணமாகச் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பயன்பாட்டைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தங்களது கான்வாயின் அளவைக் குறைத்தது பேசுபொருளானது. உடனே பிரதமரின் ஆதரவாளர்கள் ஆகா ஓகோ எனப் புகழத்தொடங்கினர். ஆனால் இதை விட...

Read More
விளையாட்டு

உதைப்பது கண்டு மகிழ்!

தென் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு க்யூரசோவ். மக்கள்தொகை இரண்டு லட்சத்துக்கும் குறைவு. கால்பந்து வரலாற்றிலேயே இவ்வளவு சிறிய நாடு பங்கு பெறுவது இதுவே முதல்முறை. ஆனால் உலகின் மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியா இப்போட்டிக்குத் தேர்வாகவே இல்லை. இதுபோல ஏராளமான சுவாரசியத்...

Read More
ருசி

சில்லுனு ஒரு காபி

பெரும்பாலான தமிழர்கள் காலை எழுந்து, பல் துலக்கியவுடன் செய்யும் வேலை என்ன? காபி குடிப்பது. இந்தியாவிலேயே அதிகமாகக் காபி அருந்தும் மாநிலம் தமிழகம். காபி நமக்கு அலுப்பதே இல்லை. எங்கேயும் எப்போதும் கோல்ட் காபி, லியோ சாக்லேட் காபி, கொரோனா காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட டல்கோனா காபி என்று அயர்ச்சி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!