தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர். அசோக்குமார் வீரமுத்து, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இடம்பிடித்துச் சாதனை படைத்திருக்கிறார்.
புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகமும், உலகின் மிகப் பெரிய கல்விசார் பதிப்பகமான எல்சேவியர் பப்ளிஷர்ஸும் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு வருடங்களாக அசோக்குமார் இடம்பெற்று வருகிறார்.
உலகின் முன்னணி விஞ்ஞானிகளுக்கான பெருமைமிகு அங்கீகாரமாகக் கருதப்படும் இந்தப் பட்டியலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒருசில இந்தியர்களில் அசோக்குமாரும் ஒருவர்.















Add Comment