நவம்பர் 3 அன்று அமெரிக்கா வாக்களித்தது. இது ஜனாதிபதித் தேர்தல் அல்ல, ஆனால் முக்கியத்துவத்தில் குறைந்ததும் அல்ல. டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்று இரண்டு ஆண்டுகள். அவருடைய ஆட்சிக்கு மக்கள் தந்த மதிப்பெண் இது. முடிவு மிகத் தெளிவாக இருந்தது. காங்கிரஸின் இரு அவைகளும் கைமாறியுள்ளன. இரண்டு அவைகளின் கட்டுப்பாடும் ஜனநாயகக் கட்சிக்குச் சென்றுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெயர் காங்கிரஸ். அதில் இரண்டு அவைகள் உள்ளன. பிரதிநிதிகள் சபை, செனட் என்றழைக்கப்படும் இவை நம் மக்களவை, மாநிலங்களவை போன்றவை.
பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்கள் பிரிக்கப்படுகின்றன. இவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. செனட்டில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். பெரிதோ சிறிதோ, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா இருவர்தான். இவர்களுடைய பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். பெரும்பாலான மாநில ஆளுநர்களுக்கும் நான்கு ஆண்டுகளே. ஜனாதிபதிப் பதவியின் நடுவில் இந்தத் தேர்தல் வருகிறது. அதனால் இதை இடைக்காலத் தேர்தல் என்கிறார்கள்.















Add Comment