Home » உரி – 168
உரி • நாள்தோறும்

உரி – 168

168. விவேகி

ஆன்பொருநைக் கரையிலிருந்து குடிசையை நோக்கிக் கருவூராரும் சார்வாகனும் நடக்கத் தொடங்கிய நேரத்தில் அபுதுவும் காளத்தியும் எதிரே ஓடி வந்தார்கள். அவர்கள் வந்த வேகத்தினைத் தொலைவிலிருந்தே கண்ட சார்வாகன்,

ஐயனே, இக்காலைப் பொழுதில் ஏதோ பெரிய இடரென்று நினைக்கிறேன். எதற்கு இவர்கள் இப்படி ஓடி வருகிறார்கள்?

கருவூரார் அமைதியாகச் சொன்னார்,

சிறிது மாற்றிச் சிந்தித்துப் பார். ஏதேனும் நல்லது நிகழ்ந்திருக்கலாம் அல்லவா?

அசுவத்தாமனின் வரம் பொய்த்து வேட்டன் இறந்துவிட்டான் என்று சொல்வார்களானால் நல்லதென எடுத்துக்கொள்வேன். இப்போதுள்ள மனநிலையில் வேறெதுவும் எனக்கு நல்லதாகத் தோன்றாது.

கருவூரார் சிரித்தார்.

மூச்சிறைக்க ஓடி வந்து வணங்கி நின்ற இருவரும் சில நொடிகள் அமைதி காத்து நிதானமடைந்த பின் சொன்னார்கள்,

ஐயனே, ஆசிரமத்துக்குப் பெருந்தரத்தார் திருசூலகிரி சாயந்தன் வந்திருப்பதாகத் தங்கள் சீடனொருவன் வந்து சொன்னான். தங்களைப் பல இடங்களில் தேடிவிட்டு இங்கே வந்து கண்டோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!