பல கோடிகளில் பொருள் செலவு. புகழ்பெற்ற கதாநாயகன், கதாநாயகி. பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள். மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பு. உலகெங்கும் உள்ள தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ். வெளியான இரண்டாவது நாளே வெற்றி அறிவிப்பு. இதுதான் வெகுஜன தமிழ் சினிமாவின் வெற்றியைச் சொல்ல இன்று கடைப்பிடிக்கப்படுகிற நடைமுறை. சமீப காலமாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் இந்த நிலைமையைச் சற்று மாற்றி வருகின்றன. பெரிய பட்ஜெட் வேண்டாம். பிரபல நடிகர்கள் வேண்டாம். அழுத்தமான கதை இருந்தால் போதும். மக்களுக்குப் பிடித்தால் போதவே போதும். சென்ற ஆண்டு இப்படி ஓடிடியில் வெளியாகி நல்ல பெயரும் வெற்றியும் கண்ட திரைப்படம், ‘கயமை கடக்க’.
குறைந்த செலவு. இருபத்தைந்தே நாள்களில் படப்பிடிப்பு. மிரட்டும் தொழில் நுட்பம் எதுவும் இல்லை. நல்ல கதை, சரியான திரைக்கதை. இயற்கைச் சூழலிலேயே ஒளிப்பதிவு. இதுவே இந்தப் படத்தின் வெற்றி. கயமை கடக்கவின் ஒளிப்பதிவாளர் சுந்தர்ராம் கிருஷ்ணன். பெயரைச் சொன்னதும் தெரிந்துவிடுகிற அளவுக்குப் பிரபலமில்லை. ஆனால், எட்டு ஆண்டுகள் குறும்படங்கள் எடுத்துத் தேர்ந்தவர். தற்போது தமிழில், ‘சூப்பர் டூப்பர்’, ‘உணர்வுகள் தொடர்கதை’, தெலுங்கில் ‘நீத்தோ’ போன்ற சில படங்களை முடித்துள்ளார். அடுத்த சில படங்களில் தீவிரமாக இருக்கிறார்.
வெற்றி என்பது தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் இருக்கிறது. ஆரவாரத்தில் அல்ல. இந்தத் தலைமுறை இப்படித்தான் நினைக்கிறது. சுந்தர்ராம் கிருஷ்ணனுடன் பேசினோம்…
Add Comment