Home » ஈ சாலா கப் நம்து
விளையாட்டு

ஈ சாலா கப் நம்து

ஜூன் 3, 2025. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் விராட் கோலி மற்றுமொரு மகுடம் சூடிய நாள். ஆர்சிபி அணிக்கு இதுதான் முதல் மகுடம். ஐபிஎல் சீசன் 18இன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ளது. ஆர்சிபி ரசிகர்களின் பிரபல கோஷமான, ‘இந்த வருடம் கோப்பையை வெல்வோம்’ நிஜமாகவே பலித்துவிட்டது.

2008இல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதிலிருந்து கோலி மட்டுமே தொடர்ச்சியாக 18 வருடங்கள் ஒரே அணிக்கு ஆடி வருகிறார். தோனி சென்னையின் ‘தல’யாக மாறிப் போனது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் பெங்களூரு அணியின் ரசிகர்களைப் பொறுத்தவரை கோலி அதற்கும் மேல்.

டெல்லியில் பிறந்து வளர்ந்து, ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடியவர் கோலி. பஞ்சாபிகளுக்கே உரிய போராட்ட குணமும், துடிப்பும் உள்ளவர். அது போகவும் “மதராஸி” கலாசாரத்துக்குப் பெயர் போனது டெல்லி. ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியதோ தென்னிந்தியாவின் நாகரிக நகரமான பெங்களூருவின் சார்பில். குண்டப்பா விஸ்வநாத், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே என அதிர்ந்தே பேசாத ஜென்டில்மேன் பிளேயர்களுக்காகப் புகழ்பெற்ற ஊர் அது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!