Home » ஃபார்முலா ஒன்: படிப்பாளிகளின் விளையாட்டு
விளையாட்டு

ஃபார்முலா ஒன்: படிப்பாளிகளின் விளையாட்டு

இன்றைய இந்திய இளைஞர்களுக்கு இன்றியமையாதவை இரண்டு. கிரிக்கெட் பார்ப்பது, ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு ஃபுல் கட்டு கட்டுவது. மூன்றாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியிருப்பதுதான் F1.

நான்கு வருடங்களுக்கு முன்பு திடீரென ஒரு நாள் ரேஸ், வெட்டெல், ரெட்புல், ஹாமில்டன் என்று ஒரு புதிய உலகம் மாணவர்களுக்கு அறிமுகமானது. எப்படி, எங்கிருந்து வந்தது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் வந்தது. அப்போது மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் ஒரு பக்கமும், ஐபிஎல் தவிர வேறு எதையும் பார்க்காத கிரிக்கெட் பக்தி மறுபக்கமும் இருக்க, யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நான்கு வருடங்களுக்குப் பின் மாணவர்கள் மத்தியில் மீண்டும் F1 பிரபலமானது. அதே போட்டிதான். ஆனால் சில பெயர்கள் மாறிவிட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் ரீல்ஸ், விளம்பரங்கள், நேர்காணல்கள் என F1 மயமாகவே இருந்தது. இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், இன்றைய தேதியில் இதுதான் தலைபோகிற விஷயம். இரானோ, இஸ்ரேலோ, உக்ரைனோ, ரஷ்யாவோ, அமெரிக்காவோ அல்ல. கல்லூரிகளில் எல்லாம் இது ஒன்றுதான் பேச்சு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!