காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது பாருங்கள்…. ஊழலை ஒழிப்போம் என்று கொடி பிடித்துக் கட்சி ஆரம்பித்த ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று ஊழல் வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கிறார்கள். அதுவும் பதவியில் இருக்கும்போதே முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பதவி வந்ததும் மாறி விட்டாரா? அல்லது ஆளும்கட்சியின் அரசியல் சதியா?’ என்று செய்தித் தொலைகாட்சிகள் விவாதிக்கின்றன. மக்களிடம் கருத்து கேட்டு யூட்யூப் சேனல்கள் வியூஸ் அள்ளுகின்றன.
அன்னா ஹசாரே என்றொரு பெரியவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் என்பதை நம்மில் சிலரால் நினைவுகூர முடியும். கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் சென்னையிலே கூட அப்பர் மிடில் கிளாஸ் அங்கிள்கள் அலுவலகப் பிரிண்டரில் போராட்ட வாசகங்களைப் பிரிண்ட் எடுத்துச் சென்று காந்தி சிலை அருகே கோஷம் போட்டதையும் நினைவுக்குக் கொண்டு வரலாம். தென்னிந்தியாவில் மேல்தட்டு வர்க்க அளவில்தான் இது பேசப்பட்டது. வடக்கில் கதையே வேறு.
மாபெரும் மக்கள் புரட்சியாக நடந்தேறியது இந்த உண்ணாவிரதப் போராட்டம். அன்னா ஹசாரே காந்தியவாதியாக அறியப்பட்டார். அவர் ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும் அவர் செய்த சமூகப் பணிகளுக்காக நன்மதிப்பைப் பெற்றிருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
Add Comment