Home » ரியாக்டர் விபத்து : விதியா? விதி மீறலா?
இந்தியா

ரியாக்டர் விபத்து : விதியா? விதி மீறலா?

ஐம்பது பில்லியன் டாலர். இந்தியாவில் மருந்துத் தொழில்துறையின் தற்போதைய மதிப்பு இது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இருநூறுக்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்தமாக மருந்துகள் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலைகள் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் நடந்த மருந்துத் தொழிற்சாலை விபத்து, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பால் நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் இருக்கிறது அச்சுதபுரம். தமிழ்நாட்டில் சிப்காட் போல, சிறப்புப் பொருளாதார மண்டலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், அச்சுதபுரம். இங்கு இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் முதன்மையானது மருந்துத் தயாரிப்பு ஆலைகள்.

கடந்த இருபத்து ஒன்றாம் தேதி அங்கிருக்கும் எஸன்ஷியா (Escientia) மருந்துத் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பதினேழு பணியாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். முப்பத்து ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். விபத்திற்குக் காரணம் வேதிக் கரைப்பான் கசிவு என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!