கே.ஏ. செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கழகத்தின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். எந்த விளக்கமும் கேட்காமல் தான் நீக்கப்பட்டிருப்பது ஜனநாயகபூர்வமானதல்ல என்பதைக் கொஞ்சம் குழப்பமாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
கழகத்திலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளைப் பத்து நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என செங்கோட்டையன் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரை கழகத்திலிருந்து நீக்கும் கடிதம் தயாராகிக்கொண்டிருந்தது. கட்சியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படாமல் அவர் வகித்து வந்த பதவிகளிலிருந்து மட்டும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். எடப்பாடி வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில் எந்தக் காரணமும் தெரிவிக்கப்படவில்லை.















Add Comment