குளியல். ஆற்றில் மூக்கைப் பிடித்து முங்கி எழுவது, அரை வாளித் தண்ணீரில் சோப்புத் தேய்த்துக் கழுவுவது, ஒரு குவளையில் உடல் முழுவதையும் நனைப்பது, ஈரத்துண்டினால் துடைத்துக் கொள்வது எனக் குளியல் கலையின் சகல வித்தைகளையும் முயன்று பார்த்தவர்கள் நாம். இந்த வித்தையெல்லாம் சொத்தையெனத் தோன்றும் வகையில், குளியலறைக்குள் ஒரு ஹைட்ரஜன் குண்டைப் போட்டிருக்கிறது ஜப்பான். வருங்கால-மனித-வாஷிங்மெஷின் ஒன்றை (மிராய்-நிங்கன்-சென்டாகுகி) வடிவமைத்திருக்கிறது.
ஆம், துணிகளைப் போல மனிதர்களைத் தேய்த்துக் குளிப்பாட்டிவிடும் இயந்திரம். உள்ளே நுழைந்து பட்டனைத் தட்டினால் போதும். பதினைந்து நிமிடங்களில் அப்பழுக்கில்லாத சுத்தத்துடன், லேசான ஈரப்பதத்துடன் மனிதர்களைத் தகதகவென வெளியே அனுப்பும். ‘காயத்ரி… இன்றும் நீங்கள் காது கிளீனிங்கை ஸ்கிப் செய்து விட்டீர்கள்’ என்று இயந்திரக் குரல் எச்சரிக்கும்.
படிப்பதற்கு மாய யதார்த்தக் கதை போல இருக்கிறதா? இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த மாயம், அமேசானில் விற்பனைக்கு வந்துவிடும்.
சென்டாகுகி என்கிற சொல் கடமுடவென்றிருந்தாலும், துணிகளைப் போல நம்மையும் உள்ளே போட்டுச் சுழற்றி எடுக்கும் இயந்திரம் அல்ல இது. அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் கூடு.














Add Comment