Home » மத்தியிலிருந்து மத்திக்கு: உபி-அகிலேஷ்-ஒரு புதிய எழுச்சி
இந்தியா

மத்தியிலிருந்து மத்திக்கு: உபி-அகிலேஷ்-ஒரு புதிய எழுச்சி

அகிலேஷ் யாதவ்

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உத்திரப் பிரதேச அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயில் பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி நகரத்தை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியிலேயே பா.ஜ.க.வால் வெல்ல முடியவில்லை. சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் பா.ஜ.க.வின் லல்லு சிங்கை வீழ்த்தியிருக்கிறார்.

பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியாமல் பின்னடைவைச் சந்தித்ததற்கு உத்திரப் பிரதேசம் மிக முக்கியமான காரணம். 80 தொகுதிகளில் அனைத்தையும் வெல்வோம் என பா.ஜ.க. நம்பிக்கொண்டிருந்த வேளையில் இண்டியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சி பெற்ற இடங்கள் மட்டும் 37.

இந்த அரசியல் மாற்றத்திற்குக் காரணம் உ.பி. மக்கள். பிரிவினைவாத அரசியல் அல்ல, அடிப்படைப் பிரச்னைகள்தான் இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருந்துள்ளது என்பதுதான் முடிவுகள் சொல்லும் செய்தி. இராமரின் பெயரைச் சொல்லி அயோத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதியே இந்தத் தேர்தல் முடிவுகள். அதேபோல மாநிலத்தில் கூட்டணி நடவடிக்கைகளை முன்னெடுத்தது, சரியான வேட்பாளர்களைப் போட்டியிடச் செய்தது என அகிலேஷ் யாதவுடைய முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்லிக்கொண்டிருந்த பா.ஜ.க.வினரை ஜெய் ஜெகன்னாத் எனச் சொல்ல வைத்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!