சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் வந்தவர்களை வெளியேற்றப் போகிறோம் என்று சொல்லிப் பதவியேற்றது டிரம்ப் அரசு. இப்போது சொந்தக் குடிமகன்கள் மீதே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மீண்டும் ஒருமுறை உலகளாவிய போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. 2020இல் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நினைவிருக்கிறதா? அதே போல இப்போது அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என்ற ஆண் செவிலியரின் மரணம், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் கொள்கைகள் குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது வெறும் ஒரு மரணம் குறித்த போராட்டம் அல்ல; இது அமெரிக்க வலதுசாரி அரசியலின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஜனவரி 24 அன்று, ICU செவிலியரான அலெக்ஸ் பிரெட்டி, மினியாபோலிஸில் ஃபெடரல் ஏஜென்ட்டுகளின் குடியேற்றச் சரிபார்ப்புச் சோதனையை அமைதியான முறையில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் பலவந்தமாகத் தாக்கப்பட்டபோது இடை நுழைந்து அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் துப்பாக்கி குண்டுகளுக்கு அவரே பலியானார். ஒரு உயிரைக் காக்கும் பணியில் இருந்த செவிலியர், அரசு அதிகாரத்தின் அத்துமீறலால் உயிரிழந்தது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.















Add Comment