Home » வரலாற்றில் ஒரு பதக்கம்!
விளையாட்டு

வரலாற்றில் ஒரு பதக்கம்!

அலிஷா சௌத்ரி

இந்தியாவில் திரைப்படங்களால் கராத்தே பிரபலம் அடைவதற்கு முன்பே வீர விளையாட்டாக அறிமுகமானது. ஜப்பானில் பயிற்சி பெற்று இந்தியாவுக்கு வந்த சென்சேய் பர்வீஸ், 1960களின் இறுதியில் இந்தியாவில் கராத்தேவைப் பிரபலமாக்கினார். மும்பையிலிருந்து தொடங்கிய கராத்தே பயிற்சிகள் டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை எனப் பல நகரங்களுக்கும் விரிவடைந்தன. சென்னையில் ரென்ஷி ஆர்.வி.டி. மணி கராத்தேவைப் பரவலாக்கினார். பயிற்சி மையங்களிலும் போட்டிகளிலும் இருந்த கராத்தே, ‘எண்டர் தி டிராகன்’ திரைப்படம் வெளிவந்த பின் நாட்டின் மூலைமுடுக்குகளிலும் பிரபலமானது.

கராத்தே போட்டிகள் இந்திய அளவில் ஒரு கூட்டமைப்பால் முறைப்படுத்தப்பட்டன. உலக கராத்தே கூட்டமைப்பின் கீழ் பதிவுபெற்ற நிறுவனமாக இந்திய கராத்தே கூட்டமைப்பு உருவானது. இந்திய அரசின் ‘கேலோ இண்டியா’ பட்டியலில் உள்ள விளையாட்டுகளில் கராத்தேயும் ஒன்று. இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், ஆசிய அளவிலும், உலக அளவிலும் நடைபெறும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வென்று வந்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர்.

உலக கராத்தே சாம்பியன்ஷிப்பில் முக்கியமானதாகக் கருதப்படும் போட்டிகள், உலக கராத்தே கூட்டமைப்பின் (WKF – World Karate Federation) கீழ் நடப்பவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!