Home » அதிகார நந்தி – 22
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 22

வளர்பிறைக் காலம்

2015 முதல் 2017 வரை உலகமே மாறியது. அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தியாவில் மோடி வலுவடைந்தார். ஐரோப்பாவில் வலதுசாரிகள் தலையெடுத்தார்கள்.

2016 நவம்பர் 8 அன்று இரவு உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார். பலர் நம்ப முடியாமல் கண்களைத் தேய்த்துக் கொண்டு ‘இது எப்படி நடந்தது?’ என்று கேட்டார்கள். இது எப்படி நடந்தது?

அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில் பல நாடுகளில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறுபான்மையினருக்கு அதிக உரிமைகள் கிடைத்தன. அலுவலகங்களில் சமத்துவம் அதிகரித்தது. ஏற்கெனவே நோய் இருந்தாலும் காப்பீடு கிடைத்தது. மனநலம் பற்றிய விழிப்புணர்வு பரவியது.

மாற்றுப் பாலினத்தவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. 2015 ஜூன் 26 அன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை அனுமதித்தது. அதற்கு ஒபாமாவும் ஆதரவு தெரிவித்தார். வெள்ளை மாளிகை வானவில் வண்ணங்களில் ஒளிர்ந்தது.

இந்த மாற்றங்கள் பழைய அதிகார மையங்களை அசைத்தன. கிறிஸ்துவ மத அமைப்புகள் கவலை அடைந்தன. வலதுசாரித் தலைவர்கள் தங்களுக்கு ஆதரவு குறையும் என்று பயந்தார்கள். பழைமைவாதச் சமூக அமைப்புகள் எதிர்த்தன. தங்கள் அதிகாரம் போய்விடுமோ என்று கவலைப்பட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!