Home » அதிகார நந்தி – 23
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 23

அதிரடி ஆரம்பம்

2016 அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் எல்லோரையும் அதிர வைத்தது. டொனால்ட் டிரம்ப் 45 ஆவது ஜனாதிபதியானார். ஹிலரி கிளிண்டன் தோற்றுப் போனார். இது யாரும் எதிர்பார்க்காத முடிவு.

டிரம்ப் ஒரு வீட்டு மனை வியாபாரி. அதிலும் கூட திவாலானவர். அரசியல் அனுபவம் கிடையாது. 70 வயதில் முதல்முறையாக அரசியலில் நுழைந்தார். ரியாலிட்டி டிவி நட்சத்திரமாக இருந்தவர். மன்ஹாட்டனில் பளிங்கு மாளிகையில் வசிப்பவர். ஐந்தாவது அவென்யூவில் வீடு. மூன்று மாடி பென்ட்ஹவுஸ். மூன்று திருமணம் செய்துகொண்டவர். இப்படிப்பட்டவர் சாதாரண மக்களின் தலைவரானார்.

எல்லோரும் ஹிலரி வெல்வார் என்றே நினைத்தார்கள். முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி. செனட்டராக, வெளியுறவு அமைச்சராக நிறைய அனுபவம். அதுவே அவரின் பலமும் பலவீனமுமாக இருந்தது. .

ஹிலரியின் இமெயில் விவகாரம் பிரச்சனையானது. தனிப்பட்ட சர்வரில் அரசாங்க இமெயில் பார்த்ததை ஊதிப் பெரிதாக்கினார்கள். டிரம்ப்பின் பிரச்சனைகள் கவனிக்கப்படவில்லை. ஆண் என்பதால் அவரின் பாலியல் அத்துமீறல்கள் மன்னிக்கப்பட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!