இரண்டு போர்கள்
உலகம் இன்று இரண்டு கொடூரமான போர்களைக் கண்டுகொண்டிருக்கிறது. உக்ரைன் மண்ணில் ரஷ்யா நடத்தும் படையெடுப்பு ஒன்று. மத்தியக் கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் கொடிய போர் மற்றொன்று. இந்த இரண்டு போர்களிலும் அமெரிக்கா ஆழமாகக் காலைவிட்டுள்ளது. ஆனால் இந்தப் போர்கள் அமெரிக்காவையும், உலகத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன?
நாளுக்கொரு புதிய உத்வேகத்துடன் உக்ரைன் போர் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க செனட், அவசரகால நிதியாக 40 பில்லியன் டாலர் உக்ரைனுக்கு அளிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கப் பொருளாதாரம் தொற்று நோய்க்காலச் சிரமங்களில் இருந்து மீளமுடியாமல் தடுமாறுகிறது.
1991இல் சோவியத் ரஷ்யாவில் இருந்து உக்ரைன் விடுபட்டது முதல் அமெரிக்கா அதனுடன் நட்பு பாராட்ட முயற்சி செய்தது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவின் சுயநலமே. உக்ரைன் பூகோளரீதியாகக் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நில அமைப்பைக் கொண்டிருப்பது. நிறைய எரிவாயுவும் இயற்கை வளங்களும் நிரம்பிய நிலப்பகுதி.














Add Comment