2025 ஜனவரி 20 ஆம் நாள், டொனால்ட் டிரம்ப் ‘அமெரிக்கக் குடியுரிமைத்தன்மையின் பொருள் மற்றும் மதிப்பைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு பிப்ரவரி 19, 2025 அல்லது அதற்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் பதினான்காம் திருத்தத்தின் குடியுரிமைப் பிரிவு ‘அமெரிக்காவில் பிறந்த அல்லது இயற்கை முறையில் குடியுரிமை பெற்ற அனைத்து நபர்களும், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, அமெரிக்காவின் குடிமக்கள் ஆவர்’ என்று தெளிவாகக் கூறுகிறது. அரசியலமைப்பின் இந்தப் பிரிவு ‘jus soli’ என்னும் மண்ணின் மைந்தர் உரிமை கொள்கையைப் பின்பற்றுகிறது. இது ஆங்கிலேயப் பொதுச் சட்டத்தில் இருந்து வந்த பழைய கொள்கையாகும். இதன் அர்த்தம் ஒரு நாட்டின் நிலப்பரப்பில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் அந்த நாட்டின் குடிமக்களாக இருக்க உரிமை பெறுவார்கள் என்பதாகும்.
டிரம்ப்பின் புதிய நிர்வாக உத்தரவின் கீழ், பெற்றோர் இருவரும் அல்லது ஒருவராவது அமெரிக்கக் குடிமகன் அல்லது பச்சை அட்டை வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களின் குழந்தை குடிமகனாக உரிமை பெற இயலும். தற்காலிக விசாவில் உள்ளவர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளின் குழந்தைகள் தானாகவே குடியுரிமை பெறமாட்டார்கள். இதில் H1B, L1, F1, J1, B1/B2 போன்ற அனைத்துத் தற்காலிக விசாக்களும் அடக்கம்.














Add Comment