அமெரிக்கத் தேர்தலைத் தொடர்கிறவர்களின் கவனத்தைக் கட்டியிழுப்பது, கொள்கைகளுக்கான விவாதங்கள் மட்டும் அல்ல. கட்சியின் அரசியல் செயற்மட்டக் குழுக்களும், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களும் எவ்வளவு நிதி நன்கொடையாக வசூலித்தார்கள், யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதுவும் கூடத்தான்.
கடந்த 2020-இல் நடந்த தேர்தல், அமெரிக்கத் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல். தேர்தலுக்கான மொத்தச் செலவு 14.4 பில்லியன் டாலர்கள். அதிபர் பைடன் 1 பில்லியனும் டிரம்ப் 774 மில்லியனும் நன்கொடையாக வசூலித்தார்கள். அதிபர் டிரம்ப் திரட்டிய நிதிக்கான நன்கொடை அளித்தவர்களில் பலர் மிகச் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 200 டாலர் ஒரு நபருக்கு என்று நிறைய நன்கொடை அவருக்கு வந்தது.
தேர்தலுக்காகும் செலவு மக்களாலேயே கொடுக்கப்படுகிறது. ஒரு பக்கம் வருமான வரியில் நன்கொடை அளிப்பது (முற்றிலும் தன்னார்வத்துடன் கொடுக்கப்படுவது), மறுபுறம் பிடித்த வேட்பாளருக்கு நன்கொடை தருவது.
Add Comment