Home » சவால் விட யாருமில்லை!
உலகம்

சவால் விட யாருமில்லை!

இது ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம். சந்தேகமே இல்லை. ஆக்சன் திரைப்படம் தான், கமர்ஷியல் மஷாலா தான் என்று தான் ரசிகப் பெருமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.காரணம் ஜே.வி.பி இன் பின்புலம் என்பது அதிரடி, சரவெடி பட்டாசு போன்றது. அதுமட்டுமல்ல, மேடை தோறும் அநுரவும், அவர் தோழர்களும் பேசிய பேச்சுக்களின் வீரியமும் வந்த மறுநாளே அத்தனை சிஸ்டத்தையும் மொத்தமாய்த் துப்பரவு பண்ணப் போகிறோம் ரகத்திலேயே இருந்தன. ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு ராஜதந்திரமாக அத்தனையும் ஒரு நிதானப் போக்கில், கச்சிதமான ஈரான் சினிமா மாதிரி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

அநுர ஜனாதிபதியான மறுதினம் கெபினட்டை அமைத்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மொத்தம் அவரோடு சேர்த்து மூன்று பேர் தான் கெபினட் அமைச்சர்கள். காரணம், அவர் கட்சியின் பாராளுமன்ற இருப்பே அவ்வளவுதான். இதனால் உலகத்தின் மிகச் சிறிய கெபினட்டைக் கொண்ட நாடு என்று ஆனது இலங்கை. அநுரவின் பதவியேற்பின் போதும் சரி, பிரதமர் ஹரினி அமரசூரிய உட்பட அமைச்சரவை பதவியேற்பின் போதும் சரி எந்தவொரு ஆரவாரமோ படாடோபங்களோ இல்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறதா என்று கூட பொதுஜனத்திற்குத் தெரியவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கடந்த காலங்களில் நடந்த பதவியேற்பு வைபவங்கள் எல்லாம் இதைப் பார்த்ததும் வெட்கித் தலைகுனிந்து கொண்டன. எல்லாச் சடங்கு சம்பிரதாயமும் முடிய உடனடியாகப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!