முகம் மட்டும் போதும்
அட்கின்ஸன் குணமாகி வந்ததில் ஜாப்ஸுக்கு மகிழ்ச்சி. தன் குடும்ப உறுப்பினர்களிடம் கூட இவ்வளவு அக்கறை காட்டியிருக்கமாட்டார். அவரது இந்த நடவடிக்கைக்குக் காரணங்கள் இருந்தன.
ஜாப்ஸுக்கு இன்டர்ஃபேஸ் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்லத் தெரியும். ஆனால் அவரால் அதைச் செயல்படுத்த முடியாது. அதற்கான திறன்கள் அவரிடம் இல்லை.
சிந்தனை அவருடையது. சிந்தனையைச் சொற்களாக்குவதில் அவர் விற்பன்னர். ஆனால் செயல்? அதற்குப் பொறியாளர்கள்தான் கைகொடுக்க வேண்டும்.
இங்குதான் சிக்கல். என்ன வேண்டும் என்று அவர் சொல்வார். அவை சாத்தியமில்லை என்று சொல்லும் பொறியாளர்களே அதிகம். ஆனால் அட்கின்ஸன் அவ்வாறில்லை.
ஜாப்ஸ் சொல்மிக்க மந்திரமில்லை. இதுதான் அட்கின்ஸனின் கொள்கை. எனவே அட்கின்ஸனை ஜாப்ஸுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கிராஃபிக்கல் இன்டர்ஃபேஸ் தயாராகிக்கொண்டிருந்தது. ஏதோ ஒன்று குறைவதாக ஜாப்ஸுக்குத் தோன்றியது. அவரது மனம் ஒன்றை மட்டும் திரும்பத் திரும்ப உரு போட்டது. அது ‘ஸ்மூத் ஸ்க்ரோலிங்’.















Add Comment