Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 28
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 28

பிரிவு

ஜாப்ஸின் முப்பதாவது பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விமரிசையாகக் கொண்டாடினார். அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே இது வியப்பு.

பிறந்தநாளுக்கான அழைப்பிதழிலேயே ஜாப்ஸின் முத்திரை இருந்தது. அதில் இவ்வாறு எழுதியிருந்தார். ‘இந்து தர்மத்தில் ஒரு தத்துவம். வாழ்வின் முதல் முப்பது வருடங்களில் நீங்கள் சில பழக்கங்களை உருவாக்குகிறீர்கள். அடுத்த முப்பது வருடங்களுக்கு அப்பழக்கங்கள் உங்கள் வாழ்வை உருவாக்குகின்றன.’

சான் ஃபிரான்சிஸ்கோவின் செயின்ட் ஃபிரான்சிஸ் ஹோட்டலில் நடந்தது பிறந்த நாள் விழா. ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

விழாவுக்கு வராத பெருந்தலைகளே இல்லை. பில் கேட்ஸும் வந்திருந்தார். வாஸ்நியாக் உள்ளிட்ட அனைவருமே கலந்துகொண்டனர்.

ஆப்பிள் கருவிகளின் டிசைனில் செலுத்தும் அளவுக்கான அக்கறையை இந்த விழாவின் ஏற்பாடுகளிலும் காட்டியிருந்தார் ஜாப்ஸ். பார்த்துப் பார்த்து உணவுவகைகளைத் தேர்ந்தெடுத்தார்.

ஸ்கெல்லி தன் பங்குக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி அசத்தினார். வாஸ்நியாக் ஆப்பிளின் தொடக்கக் கால நினைவுகளைத் தாங்கியிருக்கும் படம் ஒன்றை வழங்கினார். ஆப்பிள் II வெளியீட்டுடன் தொடர்புடையதாக இருந்தது அந்தப் பரிசு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!