Home » ஆப்பிள் கணினிகளைப் பராமரிப்பது எப்படி?
கணினி

ஆப்பிள் கணினிகளைப் பராமரிப்பது எப்படி?

பராமரிப்புக் கலையில் முனைவர் பட்டத்துக்கும் மேம்பட்ட ஒன்று உண்டானால் நியாயமாக அதை எனக்குத்தான் தர வேண்டும். நட்போ, உறவுகளோ, கருவிகளோ, அட என்னை நானே பராமரித்துக் கொள்வதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சல்லி பெற மாட்டேன். அப்பேர்க்கொத்த உத்தமோத்தமன்.

முன்னொரு காலத்தில் எல்லா இந்தியர்களையும் போல விண்டோஸ் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய அடாவடித்தனம் சகிக்காமல் ஒவ்வொரு டப்பாவும் சுருண்டு சுருண்டு செத்து விழுந்துகொண்டிருந்தன. அப்போதெல்லாம் நிதானமே கிடையாது. வேகம், வேகம், பேய் பிசாசுகளை விஞ்சும் வேகம். ஒரு அப்ளிகேஷனைத் தொட்டு, அது திறப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நான்கைந்து வினாடிகளைக் கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. திறப்பதற்கு முன்பே க்ளோஸ் செய்துவிட்டு இன்னொன்றைத் திறப்பேன். அதுவும் வரவில்லையா? உடனே வேறொன்று. அரை நிமிட அவகாசத்தில் பத்திருபது அப்ளிகேஷன்களைத் திறக்கப் பார்த்தால் எல்லாம் சேர்ந்து கூழாகாமல் என்ன செய்யும்? உடனே ரீ ஸ்டார்ட். இது நாட் ரெஸ்பாண்டிங், அது நாட் ரெஸ்பாண்டிங் என்று செய்தி வந்துகொண்டே இருக்கும். உடனே ஓங்கி ஒரே குத்து. பவர் பட்டன் பஞ்சராகிவிடும்.

cache க்ளியர் செய்ய மாட்டேன். ரீ சைக்கிள் பின்னை காலி செய்ய மாட்டேன். பேட்டரியை கவனிக்கவே மாட்டேன். திறந்த அப்ளிகேஷன் எதையும் மூட மாட்டேன். டிஸ்க் டீஃப்ராக்மெண்ட் செய்ய மாட்டேன். வைரஸ் ஸ்கேனர் ஓட்ட மாட்டேன். கோப்புகள் எதையும் ஒழுங்காகப் பராமரிக்க மாட்டேன். ஒரு பிரதிக்கு நூறு வர்ஷன் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஃபோல்டரில் இருக்கும். ரகசிய கசமுசா ஃபைல் என்னவாவது இருக்குமானால் அதை சி டிரைவில் விண்டோஸ் பேட்டைக்குள் இருக்கும் ப்ரோக்ராம் ஃபைல்ஸ் என்னும் போல்டருக்குள் போட்டு வைப்பேன். செய்யாத அக்கிரமம் இல்லை. இதனால் எப்பேர்ப்பட்ட கம்ப்யூட்டர் வாங்கினாலும் மிக விரைவில் அது என்னிடம் வீர மரணம் அடைந்தே தீரும்..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • என்ன அருமையான நகைச்சுவை ! கருத்துக்களை அள்ளி தெளித்துவிட்டீர் ! கம்ப்யூட்டரில் உருண்டு நெளியும் ஆத்மாக்களுடைய அவலங்களையும் புலம்பல்களையும் அலசி தீர்வையும் கொடுத்த அருமையான கட்டுரை! நன்றிகள் பல!🌹
    விஸ்வநாதன்

  • அனுபவக் குறிப்புகள் பிரமாதம். எலேய் சின்ராசு, எட்றா அந்த பருத்திக்காட்டுப் பணத்த. ஒடனே ஒரு ஆப்பிள் மேக் வாங்கொணும்!!”

  • நானொருவன்தான் 2020 McBk லிருந்து திரும்ப பழைய McBkAir க்கு பின்சென்ற அப்பிராணி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாரா வும் நம்ம (பிராணி) இனம்தான் என்று தெரிந்ததும்… என்ன ஒரு சந்தோசம்…!!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!