Home » 15 கோடி ஃபாலோயர்ஸ்
இசை

15 கோடி ஃபாலோயர்ஸ்

பின்னணிப் பாடகர் அரிஜித் சிங், இதயத்தை வருடும் இனிய குரலுக்குச் சொந்தக்காரர். இவர் பாடும் பாடல்கள் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் தவறாமல் இடம்பெறுபவை. குறிப்பாக, இவரின் காதல் பாடல்கள். பாடகராய் மட்டுமின்றி, இசையமைப்பதிலும் இசை தயாரிப்பிலும் முத்திரை பதித்துவருபவர். தன் ஆத்மார்த்தமான அற்புத இசைக்காகத் திரையிசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

Spotify எனும் முன்னணி இசை ஸ்டிரீமிங் சேவை தளத்தில் மட்டும் சுமார் பதினைந்து கோடி பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். உலகில் வேறெந்த இசைக் கலைஞருக்கும் இதுவரை கிடைக்காத பெருமை இது. இதில் கவனிக்கத்தக்க விஷயம், அரிஜித் சிங் பாடுவது பெரும்பாலும் இந்தியில் மட்டுமே. உலகப் புகழ் ஆங்கில பாப் பாடகியான டெய்லர் சுவிஃப்ட்டைக் கூட சுமார் 14 கோடி பேர்தான் பின்தொடர்கின்றனர். கடந்த நான்கு வருடங்களாக Spotifyஇல் அதிக அளவில் ஒலித்த இந்திய இசைக் கலைஞர் அரிஜித் சிங்தான்.

இரண்டாவது சாதனை, இந்திய இசைக் கலைஞர்களில் அரிஜித் சிங்தான் மிக அதிகச் சம்பளம் வாங்குபவர். இரண்டு மணிநேர மேடைக் கச்சேரிக்குப் பத்து கோடியிலிருந்து பதினான்கு கோடி ரூபாய் வரை அவருக்குச் சம்பளமாகத் தரப்படுகிறது. இது அவரை உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் கலைஞர்களுள் ஒருவராக உயர்த்தியுள்ளது. அவரது கச்சேரியின் டிக்கெட்டுகள் 2000 ரூபாயிலிருந்து 95,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த கச்சேரியில் சில டிக்கெட்டுகள் பதினாறு இலட்சம் வரை விலை போனதாம்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!