மெல்லிய தென்னங்கீற்றுகளைத் தன்னிஷ்டப்படி வளைத்து கைவேலைகள் செய்து காண்போரைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சவடமுத்து. தென்னங்கீற்றுகளை வைத்து இவர் செய்த நம்மாழ்வாரின் உருவம், முதல்வர் ஸ்டாலினின் முகம் போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றவை. “இது போன்ற ஒரு உருவம் செய்ய எனக்கு இரண்டு தினங்கள் கூட ஆயிருக்கிறது. தூக்கம் இல்லாமல் 36 மணி நேரம் தொடர்ந்து கண்விழித்து நம்மாழ்வார் படத்தை உருவாக்கினேன்” என்கிறார்.
“நமக்கு இஷ்டமான வேலையைச் செய்யும்போது என்ன கஷ்டம் வந்தாலும் நமக்குத் தெரியாது சார். பணம் மட்டுமே போதும்னு நெனைக்காம இஷ்டப்பட்டுக் கஷ்டப்படறேன் சார் கண்டிப்பாக முன்னுக்கு வந்துடுவேன். என் கலை என்னைக் கைவிடாது” என்கிற சவடமுத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை ஒட்டியுள்ள வரப்பட்டு என்கிற கிராமத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர்.
அந்த தென்னங்கீற்றுகலைஞரின் தொலைபேசிஎண்ணை பதிவிட்டது சூப்பர்.நல்ல கட்டுரை.தேவையான தகவல்கள் மட்டுமே இருந்தது.