100. பூரணம் வானில் பருந்தொன்று நெடுநேரமாக வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் வட்டம் விரியும் எல்லைக்குள் வந்த தருக்களெல்லாம் சட் சட்டென்று அசைவதை நிறுத்த ஆரம்பித்தன. காற்று ஒடுங்கியது. பட்சிகள் ஒடுங்கின. பகல் தனது நிறத்தைக் குறைத்துக்கொண்டு சாம்பர் பூசிப் புலப்பட ஆரம்பித்தது. மித்ரனின் நிறம்...
Author - பா. ராகவன்
99. ஒரு வினா ‘உனக்குச் சிறிது தனிமை தேவைப்படலாம். நான் அங்கே சென்று அமர்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ரிஷி சற்றுத் தள்ளி இருந்த தருவின் நிழலை நோக்கிச் சென்றபோது, அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. எதற்கு என்று நான் கேட்கவோ, அதற்கு அவன் விடை சொல்லவோ அவசியமே இல்லை என்பது போல இருந்தது, அவன் திரும்பிப்...
98. மும்முனைக் கருவி நதியோரமாகவே நடந்துகொண்டிருந்தோம். ஒரு நதி என்பதற்கு அப்பால் அதுவரை சர்சுதியை நான் வேறு எதுவாகவும் கருதியதில்லை. சர்சுதி என்றல்ல. எல்லா நதிகளும் அப்படித்தான். கிராத குலம் வசிக்கும் ஹிமத்தின் மடியிலிருந்து எத்தனையோ நதிகள் புறப்படுகின்றன. கண் திறந்து பார்க்குமிடமெல்லாம் நதிகள்தாம்...
97. பிரம்ம லிபி ருத்ர மேருவின் அடிவாரத்தில் சர்சுதியின் கரையில்தான் படுத்திருந்தேன். பல நாள்களாக உறக்கமற்று இருந்ததனாலோ, எல்லாம் போதுமென்ற நிச்சலனம் உண்டாகியிருந்ததனாலோ, வழக்கத்தினும் அதிகம் பசித்து, வழக்கத்தினும் அதிகம் உண்ட களைப்பினாலோ தெரியவில்லை. எவ்வளவு நேரம் உறங்கினேன் என்றே தெரியாமல்...
96. காணிக்கை நடந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் நடப்பது போலத் தெரியவில்லை. இடம் பெயர்ந்துகொண்டே சென்றது. நிலக்காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஆயினும் எங்கோ ஓரிடத்தில் நிலைகொண்டிருப்பது போலத் தோன்றியது. இரவு பகல் மாற்றம் தெரிந்தது. களைப்புத் தோன்றவில்லை. கால் வலிக்கவில்லை. உறங்க வேண்டுமென்று...
95. வந்தவர்கள் என் உடலற்ற தேகம் சிலிர்க்கிறது. மனமற்ற சிந்தையில் ஒரு பழைய மணம் மெலிதாக நுழைந்து சுழல்கிறது. காரணம் தெரியாமல் உள்வெளியில் எதுவோ ஒன்று குதியாட்டம் போடுகிறது. இது நான் எதிர்பாராத உணர்ச்சி. எதனால் அப்போது அப்படி ஆனதென்று எனக்கு விளங்கவில்லை. வெளியெங்கும் அலைந்து திரிந்து அடங்கித்...
94. வேள்வித் தீ அன்றைக்கு அதிகாலையிலேயே அதர்வனின் சீடர்கள் தமது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு, ஆசிரம வளாகத்தை சுத்தம் செய்து, அலங்கரிக்கத் தொடங்கினார்கள். வனத்திலிருந்து பறித்து வந்த புஷ்பங்களைக் குடில்களின் முகப்பில் கொத்துக் கொத்தாகச் சொருகி வைத்தார்கள். அதர்வனின் குடிலுக்கு வெளியே இருக்கும்...
93. ஒடுங்குமிடம் எல்லாம் எல்லோருக்கும் புதிதாக இருந்தது. விபரீதமாக ஏதேனும் நடக்குமோவென்று எல்லோரும் நினைத்தார்கள். வித்ருவின் பிராமணர்கள் வேள்விகள் செய்ய ஆயத்தமானார்கள். சத்ரியர்களும் பணிகளும் பிறரும் காண்கின்ற அனைவரையும் அழைத்து அழைத்து தானங்கள் செய்தார்கள். பிழைபட்ட நிமித்தங்கள் அனைத்தும்...
92. அறிந்தவை அவன் திரண்டிருந்தானா, சிதறியிருந்தானா என்று அவ்வளவு எளிதாக யாரும் உணர்ந்தறிய இயலாது. ஆனால் வேறொன்றாகியிருந்தான் என்பதைக் கண்டதும் தெரிந்துகொள்ள முடியும். அவன் வந்து சில தினங்களே ஆகியிருந்தன என்றாலும் வித்ருவில் வசிக்கும் பிராமணர்கள் யாருக்கும் அவன் வேண்டாதவனாகியிருந்தான். பிராமணர்கள்...
91. தரிசனம் அவன் உண்மையானவன். நேர்மையானவன். தூய மனம் கொண்டவன். தவறியும் பிழைபட்ட செயலொன்றைச் செய்ய மாட்டான். அனைத்தினும் முக்கியம், என்னை அவன் வசீகரித்து ஏமாற்ற விரும்ப வாய்ப்பே இல்லை. இவற்றிலெல்லாம் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் அவன் தாள் பணிந்து சீடனாக அமர்ந்தால்தான் என் வினாவுக்கு...