Home » Archives for ஜான்பால் ரொஸாரியோ

Author - ஜான்பால் ரொஸாரியோ

Avatar photo

சுற்றுச்சூழல்

மாதவ் காட்கில் என்னும் தீர்க்கதரிசி

இந்தியச் சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில், ஜனவரி 7ஆம் தேதி தனது 83ஆவது வயதில் புனேவில் காலமானார். இந்தியாவில் சூழலியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியச் சிந்தனையாளர். ஆறு தசாப்தங்களாக இயற்கை வளங்களைக் காக்கத் தீவிரமாகப் போராடியவர். மக்களின் விஞ்ஞானி என்று பரவலாக அறியப்பட்டவர். 2024ஆம் ஆண்டு...

Read More
உலகம்

இரான்-இஸ்ரேல்: போர் 2.0?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...

Read More
ஆண்டறிக்கை

ஆட்டிப் படைக்கும் ஆசை

பிப்ரவரி 22, 2025. நீங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதத் தொடங்கலாம் என்று ஆசிரியர் பா.ராகவனிடமிருந்து வாய்ஸ் நோட் வந்திருந்தது. அச்செய்தியைக் கேட்ட போது இருந்த இடம், சூழல், மன உணர்வை இப்போதும் நினைவுகூர முடிகிறது. பெரும்பாக்கம் கிரிக்கெட் லீக்கின் செமி ஃபைனல் ஆட்டம். டாஸ் வென்ற எங்கள் அணி...

Read More
தீவிரவாதம்

கடலோரக் கொலைகள்: கலவரத்தில் ஆஸ்திரேலியா

டிசம்பர் 14, 2025. பாண்டி (Bondi) கடற்கரை, சிட்னி. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டத்துக்காகப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். மாலை 6:45 மணிக்குக் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர்...

Read More
குற்றம்

என்னதான் நடக்கிறது சென்னையில்?

நம்பியோ (Numbeo) என்னும் தரவுத்தளம் இந்தியாவின் பத்து பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயனர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலான இக்கணக்கெடுப்புப் பட்டியலில் சென்னை எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அரசு தரப்பைச் சார்ந்த NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட இந்தியாவின்...

Read More
உலகம்

ஜனநாயகத்துக்கு ஜே!

டிசம்பர் 3, 2024, தென்கொரியா. இரவு 10:30 மணி. தேசியத் தொலைக்காட்சியில் அதிபர் யூன் சுக் தோன்றினார். ‘எனதன்புக் குடிமக்களே, கனத்த இதயத்துடன் இச்செய்தியை அறிவிக்கிறேன். நம் நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஜனநாயகக் கட்சி (Democratic party) அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது...

Read More
இந்தியா

அருணாசலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம்?

லண்டனில் வசித்து வரும் இந்தியரான பிரேமா வாங்ஜோம், விடுமுறைக்காக. ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருந்தார். நவம்பர் 21, 2025 அன்று அவர் இணைப்பு விமானத்தில் ஏற ஷாங்காய் விமான நிலையம் வந்தடைந்தபோது பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். சீனக் குடியேற்ற அதிகாரிகள் அவரது இந்திய...

Read More
நுட்பம்

மசால் தோசை முதல் மமிதா பைஜு வரை

‘இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரை 1990களின் திரைப்படக் கதாநாயகியைப் போன்று மாற்று. விடியலின் பொன்னிற ஒளியைப் புகைப்படத்தில் மிதமாகப் பாய்ச்சு.’ செய்யறிவுச் செயலி: படம் உருவாகிவிட்டது. ‘தலையில் மல்லிகைப் பூவைச் சொருகு.’ செய்யறிவுச் செயலி: சொருகியாகிவிட்டது...

Read More
உலகம்

ஒட்டி உறவாடும் தாலிபன்

ஆப்கனிஸ்தானிலுள்ள இந்தியப் பிரதிநிதிகள் அலுவலகம், இந்தியத் தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆப்கனின் வளர்ச்சிக்கு காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் உதவும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்மையில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது...

Read More
உலகம்

யார் இந்த ஹூதிகள்?

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் பஞ்சம் உச்சநிலையை அடைந்துள்ளது. ஏமனின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இதில் ஒரு கோடிக்கும் மேலானோர் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக ஐ. நாவின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!