சமீபத்தில்தானே அந்த ஐஸ்கிரீம் கடைகள் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றன. என்னைப் போல் சுவைஞர்கள் பலர் உருவாக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றுணர்ந்து ஐஸ்கிரீம் கடைகள் ஐஸ்கிரீமுடன் கலந்து சாப்பிட சாக்லேட் சிரப் (chocolate syrup), ஸ்ட்ராபெரி சாஸ் (Straw berry sause), மார்ஷ்மல்லோ சாஸ்...
Author - சிவசங்கரி வசந்த்
இரும்பை ஈர்க்கும் விசை காந்தத்தில் இருப்பதுபோல விநோதமான நபர்களை ஈர்க்கும் ஒருவித ஈர்ப்பு விசை என் கணவரினுள்ளே இருக்கிறது. விநோத குணம் கொண்ட அற்புதப் பிறவிகள் யாராக இருந்தாலும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் நண்பர்களாகி விடுவார்கள். உதாரணமாக என் கணவர் வேலை பார்த்துவந்த அலுவலகத்தில் புதிதாக ஒருத்தர்...
வீட்டிற்கு வீடு பலகாரங்களின் வாசம் வருகிறது என்றால் தீபாவளித் திருநாள் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அந்த அளவுக்கு தீபாவளிப் பண்டிகையில் முக்கிய இடம் பிடித்திருப்பவை பலகாரங்கள்தாம். ஒருநாள் பண்டிகைதான் தீபாவளி. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு...
எங்கள் பக்கத்து வீட்டிற்குச் சென்ற வருடம் புதிதாக ஒரு தமிழ்க் குடும்பம் குடி வந்தது. குடி வருவதற்கு முன்பு வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்து முடிக்க வந்தவர்களிடம், நாங்களும் தமிழர்கள் என்று வாட்ச்மேன் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட அடுத்த நிமிடமே அவர்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்கள்...
பள்ளி நாட்களில் எனக்குள் இருந்த ஒரு முக்கியமான கேள்வி ‘நாம் எதற்காக வரலாற்றைப் படிக்க வேண்டும்? என்பதுதான். அதிலும் வரலாறு என்பது ஏதோவொரு சத்திரியனைப் பற்றிப் பேசுகிறது அல்லது ஒரு சதிகாரனைப் பற்றிப் பேசுகிறது. சாமானியர்களைப் பற்றியா பேசுகிறது? இல்லையே…. சாமானியர்கள் பற்றிப் பேசாத...
துபாய் எக்ஸ்போ. நூற்றித் தொண்ணூற்றி இரண்டு நாடுகள் கலந்து கொண்ட முதல் எக்ஸ்போ. மொத்த எக்ஸ்போவையும் சுற்றிப் பார்க்காவிட்டால் அந்நாட்டில் நான் வாழ்ந்து என்ன பயன்? அதனால் எக்ஸ்போ தொடங்கும் முதல் நாளிலிருந்தே என் பயணத்தையும் தொடங்கிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். பயணமா என்று நீங்கள் ஆச்சரியப் படலாம்...
நான் பத்தாவது படிக்கும்போது திருநெல்வேலியில் கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் புதுவீடு கட்டிக் குடியேறினோம். அந்தப் பகுதியில் அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட ஐம்பது வீடுகள் வந்த பிறகு ஒரு அம்மா காய்கறி விற்க எங்கள் பகுதிக்குத் தினமும்...
ஒரு மனுஷிக்கு எத்தனை பெயர் இருக்கலாம்..? ஒன்று, இரண்டு அல்லது மூன்று..? எனக்கு ஒன்பது பெயர்கள். ஒரே நேரத்தில் ஒன்பது பெயர்கள் வைத்துக் கொண்டு வாழ்வது என்பது எத்தனை சிரமம் தெரியுமா? அஷ்டலட்சுமிகளுக்காவது அவரது எல்லா பெயரும் லட்சுமி என்று முடியும்படி இருக்கிறது. ஆனால் எனக்கோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்...
ஆகஸ்ட் பதினைந்து நமக்கு சுதந்திர தினம். ஆனால் அது உலகத்தில் அனைவரும் சுதந்திர தினமாக அமைவதில்லை. அதே நாள் சிலருக்குச் சுதந்திரத்தை பறிகொடுக்கும் தினமாகவும் மாறிவிடுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று ஈரானிய இயக்குநரான சயீத் ரூஸ்டேயின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது ஈரானிய அரசு...
இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆடி மாதத்தில் ஊருக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆடி மாதம் என்பது கோயில்கள் எல்லாம் கோலாகலமாக...