உலகளவில் தேயிலை உற்பத்தியில் முதலிடத்திலிருந்த சீனாவை முந்துவதற்கு பிரிட்டிஷ் அரசு பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வந்தது. அதனுடைய காலனி நாடான இந்தியாவில் தேயிலை வளர்க்கப் பலவிதமான முயற்சிகளை எடுத்தது.
1774இல், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் சீனாவிலிருந்து வந்த தேயிலை விதைகளை பூட்டானுக்கு அனுப்பிப் பயிரிடச் செய்தார். ஆனால் எதிர்பார்த்தபடி தேயிலை வளரவில்லை. இதையடுத்து இந்தியாவில் தேயிலை பயிரிடலாம் என பிரிட்டிஷ் தாவரவியலாளர் சர் ஜோசஃப் பேங்க்ஸ் பரிந்துரைத்தார்.
1780இல் சீனாவிலிருந்து எடுத்து வரப்பட்ட தேயிலை விதைகள் இந்தியாவின் பல இடங்களில் விதைக்கப்பட்டன. அவை உடனடியாக வளர்ந்து பலன் தராததால் அவற்றை மறந்து போனார்கள். எனினும் அஸ்ஸாமின் பழங்குடியினர், பிரிட்டிஷார் அங்கு தேயிலையைக் கண்டறிவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பலப்’ என்ற உள்ளூர் பெயர் கொண்ட தேநீரை அருந்தி வந்திருக்கின்றனர்.















Add Comment