சதுரங்க வரலாற்றில் பெரும் கேளிக்கைச் சம்பவமாகக் கருதப்பட்டது சென்ற வருடத்தில் மேக்னஸ் கார்ல்ஸன் (Magnus Carlsen), தொம்மராஜு குகேஷிடம் தோற்றுவிட்டு மேஜை மீது ஒரு போடு போட்டதுதான். அதன் காணொளி பரவாத இடமில்லை. இணையத்தில் பெரிய ‘மீம்’ ஆக மாறியது.
ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்பதற்கெல்லாம் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு சம்பவம் செய்பவரல்ல கார்ல்ஸன். தற்சமயம் உலகச் சதுரங்கத் தளத்தில் சவால் விடக்கூடிய எதிராளியே இல்லாதவர். எவரும் சாதிக்காதவற்றையெல்லாம் சாதித்து, முப்பத்து ஐந்து வயதில் தனது பெயரை வரலாற்றில் இப்போதே பொறித்துவிட்டவர். அசாத்திய மனத் திடம் கொண்ட கார்ல்ஸன் அவ்வாறு தனது சமநிலையில் தவறியது ஏன்?
தனது பதினெட்டாவது வயதில் 2024ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவைச் சேர்ந்த டிங் லிரென் (Ding Liren) என்ற வீரரை வீழ்த்தி, சதுரங்க வரலாற்றிலேயே உலக சாம்பியன் பட்டத்தை மிக இளம் வயதில் வென்ற பெருமையைப் பெற்றார் குகேஷ். ஆனால், நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்ஸன் சதுரங்க விளையாட்டுத் திறனின் அளவுகோலான ஈலோ (Elo) ரேட்டிங் கணக்கில் 2840 புள்ளிகளுடன் உலகில் தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார்.















Add Comment