1957 ஏப்ரல் 5 அன்று கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI ) தலைவரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வரானார். அதுவே உலகில் முதல் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம்.
திபெத்திய எழுச்சியின் தோல்வியினால் பதினான்காவது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததும், இருநாடுகளில் எல்லையில் நிகழ்ந்த மோதல்களும் 1962 அக்டோபர் 20ஆம் தேதி இந்தியா-சீனா போர் தொடங்கக் காரணமாக அமைந்தன. லாங்ஜு மற்றும் லடாக்கில் உள்ள கொங்கா பாஸில் நடந்த ஆயுத மோதல்கள், இரு நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியான உறவுச் சிக்கல்களைத் தோற்றுவித்தது. நவம்பர் 20 அன்று சீனா போர்நிறுத்தத்தை அறிவித்தது.
வடக்கில் நின்ற போர், வடகிழக்கில் 1965 ஏப்ரலில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான காஷ்மீர் போராக உருவானது. ஐந்து வாரங்கள் நடந்த இப்போரில், இந்தியாவின் டித்வால், ஊரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானின் ராணுவத் தளங்களை இந்தியா கைப்பற்றியது.















Add Comment