Home » கருவிகளின் குழந்தைகள்
சமூகம்

கருவிகளின் குழந்தைகள்

சாலையிலோ பணியிடத்திலோ எதிர்ப்படும் ஒரு சராசரி ஜென் ஸீ இளைஞரிடம் ஏதேனும் எளிய தகவலைக் கேட்டுப் பாருங்கள். அது ‘பக்கத்துல ஸ்டேட் பேங்க் எங்க இருக்கு?’ என்பதாகக் கூட இருக்கலாம். பெரும்பாலானோரால் ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் பதில் சொல்ல முடியாது.

இதனை இணையத்தில் எல்லாமே இருக்கிறது என்னும் துணிச்சலாகவும் எடுத்துக் கொள்ளலாம். எதையும் நினைவுக்குள் புகுத்தாமல் மறந்துவிடும் டிஜிட்டல் அம்னீஷியாகவும் (ஆய்வாளர்கள் இதனை ‘கூகுள் விளைவு’ எனவும் குறிப்பிடுகின்றனர்.) புரிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தகவல் எங்கே கிடைக்கும் எனத் தெரிந்து வைத்துக் கொள்வதிலேயே ஜென் ஸீ தலைமுறையினர் திருப்தி அடைந்து விடுகின்றனர்.

மனித மூளையில் ஹிப்போகாம்பஸ் என்றொரு பகுதி உண்டு. அங்குதான் புதிய நினைவுகள் சேமிக்கப்படுகின்றன. மனித மூளைக்குள் நீண்ட கால நினைவு, தற்காலிக நினைவு என இரு நினைவு அமைப்புகள் உண்டு. ஒரு தகவலை மூளை நீண்ட கால நினைவுக்கு அனுப்ப, குறைந்தது பன்னிரண்டு முதல் பதினைந்து வினாடிகள் ஆழ்ந்த கவனம் தேவை. சமூக ஊடகப் பரவலுக்குப் பின் ரீல்ஸ், ஷார்ட்ஸ் கலாசாரம் ஒரு தகவலைக் கவனிக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!