சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம் நாயகன், நாயகியின் செல்பேசிகளும் அதனுள் இருக்கிற வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளும் தான். இந்த பிரபலமான செயலிகளைத் தாண்டிப் பல இலட்சம் செயலிகள் இருக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுத்த ஆறு செயலிகளை இங்கே தெரிந்து...
Author - தி.ந.ச. வெங்கடரங்கன்
புது செல்பேசி வாங்க முடிவு செய்துவிட்டீர்கள், ஆனால் எந்தச் செல்பேசியை வாங்குவது..? இன்று சந்தையில் வகை வகையாக, நூற்றுக்கணக்கில் செல்பேசிகள் கிடைக்கின்றன, அதில் நமக்கு ஏற்ற வகையை எப்படித் தேர்வு செய்வது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கடந்த ஜூலை 13 ஆம் இதழில், புதுச் செல்பேசி வாங்கியவுடன் என்ன...
ஐஃபோன் என்றால் அதில் ஒரே இயங்குதளம் தான்: அது ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-ஓ-எஸ். இது ஒரு காப்புரிமை பெற்ற படைப்பு. வேறு எவரும் இதை வெளியிட முடியாது . ஆனால் ஆன்ட்ராய்ட் அப்படியில்லை. அது ஒரு திறன்மூலப் படைப்பு. அதனால் ஒவ்வொரு செல்பேசி உற்பத்தியாளரும் மூல ஆன்ட்ராய்ட் மென்பொருளைப் பிரதியெடுத்து...
அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தும் செயலிகளில் முதலிடம் பிடிப்பது மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸ்சேல் என்கிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளாகத் தான் இருக்கும். ஒரு கணிப்புப்படி எண்பது சதவிகித பயனர், மைக்ரோசாப்ட் ஆபீஸ் செயலிகளில் இருக்கும் வெறும் இருபது சதவிகித வசதிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்;...
நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில இலவசச் செயலிகளை நாம் அறிந்து கொண்டால் தினந்தோறும் நம் கணினி/செல்பேசிப் பயன்பாடு எளிதாகும். கூகிள் காண்டாக்ட்ஸ் நம்மில் பலருக்கு இது நடந்திருக்கும்...
தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக் கூடியவை. இவற்றைப் பார்க்கும் உங்களுக்கு, பல வருடங்களாக ஐபோன் பயனராக இருந்தாலும், உங்களின் அடுத்த செல்பேசி ஐபோனாக இல்லாமல் சாம்சங் போனாக இருக்கலாமே...
என்ன தான் எல்லா வேலைகளையும் வாட்ஸ் ஆப்பில் செய்தாலும் அலுவல் பணிகளுக்கு, வரி செலுத்த, பொருட்களை வாங்கும் போது ரசீதுகளுக்கு இன்றும் மின்னஞ்சல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல் என்றாலே நம் எல்லோரிடமும் இருப்பது கூகுள் நிறுவனத்தின் இலவச ஜிமெயில் கணக்குத்தான். ஜிமெயில் செயலி எல்லோருடைய செல்பேசியிலும்...
சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதைத்...
கணினி உலகம் நாளுக்கு நாள் நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு ஓய்வு நாளெல்லாம் கிடையாது. இங்கே ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு பெரிய மாறுதல் வரும். கடந்த இரண்டாண்டுகளில் தாமதமான விஷயங்களை இந்தாண்டிலிருந்து (2023) எதிர்பார்கலாம். அவை யாவை? 5-ஜி இந்தாண்டு சகஜமாகிவிடப் போகிற...
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா தலைதூக்கலாம் என்கிற நிலையில், அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே காணொளிகள் மூலமாக வேலை செய்யும் முறை மீண்டும் வரலாம். இந்த நிலையில், எப்படிச் சிறந்த முறையில் வீடியோக்களில் பங்கு பெறலாம்? வைஃபை இணையத் தொடர்பு அது செல்பேசியோ கணினியோ...