Home » Archives for காயத்ரி. ஒய் » Page 10

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

உலகம்

காஸாவில் அமெரிக்கா: உதவியா? உபத்திரவமா?

காஸா கடற்பகுதியில் அவசரமாக ஒரு கப்பல்துறையை அமைக்கவிருக்கிறது அமெரிக்கா. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அந்தக் கப்பல்துறை மூலமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதியிலிருந்து காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் இன்னும் முடிந்தபாடில்லை. ஐந்து...

Read More
உணவு

நூறாண்டு ருசி

விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு. ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால்...

Read More
சிறுகதை

மெட்ராஸ் வரன்

“மெட்ராஸ்லேர்ந்து ஒரு வரன் வந்ததுல்ல… எட்டுப் பொருத்தம்கூட இருந்ததே… அவங்க வர ஞாயித்துக்கிழமை வரேன்னு சொல்லிருக்காங்க…” அப்பா யாரைச் சொல்கிறார்? அந்த கார்த்திக்கையா? ஹரீஷ் கல்யாண் போலச் சிவப்பாக இருந்தானே? ஏதோ மார்க்கெட்டிங்க் கம்பெனியில் சீனியர் மேனேஜர் வேலை. ஆறிலக்கத்தில்...

Read More
உணவு

அத்திரிபாச்சா உருண்டை

“இழையை உடைச்சா குகை மாதிரி ஓட்டை இருக்கணும். அதை வைச்சு உறிஞ்சி இழுத்தோம்னாக்க, தேனே மேல ஏறி வரனும்.” என பாட்டி ஆரம்பித்தால் “அதுனாலதான் அதுக்கு தேங்கொழல்னு பேரு வச்சிருக்காங்க…” என பிள்ளைகளெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடி முடிப்போம். ஒவ்வொரு தீபாவளிக்கும், விறகடுப்பில் பெரிய இரும்புச் சட்டியை...

Read More
ஆன்மிகம்

மாதமெல்லாம் திருவிழா

அம்மனை வழிபடும் மாதம் ஆடி, பெருமாளுக்கு விசேஷம் புரட்டாசி, மார்கழி. இப்படி தனித்தனியாக அல்லாமல் அனைத்துத் தெய்வங்களுக்கும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது மாசி மாதம். தவிர, ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் பல சுப காரியங்களைச் செய்ய முடியாது. ஆனால் இறை வழிபாட்டோடு சேர்த்து இல்ல விழாக்களையும்...

Read More
உணவு

ஹாட் அண்ட் ஸோர் யெல்லோ கேக் (என்கிற புளிப்பொங்கல்)

“டெய்லி இட்லி, தோசை, இல்லன்னா உப்புமா. வீக்கெண்ட் வந்தா பூரி, சப்பாத்தி. போரடிக்குது அத்தாட்டி. ஏதாவது புதுசா டிரை பண்ணலாம்னா இவருக்கு, பசங்களுக்குப் பிடிக்குமான்னு யோசனையாயிருக்கு. கஷ்டப்பட்டு பண்ணி வேஸ்டாகிடுச்சுன்னா என்ன பண்றது?” ஊரிலிருந்து வந்திருந்த அத்தைப் பாட்டியிடம் புலம்பிக்...

Read More
சுற்றுலா

பத்து தீவு, நூறு ரூம்

பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...

Read More
உணவு

ரோட்டுக்கடை அத்தாட்டி சுண்டல்

புத்தகக் கண்காட்சியின் கூரைகள் உயரமாகப் பிரம்மாண்டமாகவே இருந்தன. ஆனாலும் உள்ளே போன ஐந்து நிமிடங்களில் புழுங்கித் தள்ள ஆரம்பித்து விடுகிறது. குளிர்காலத்திலும் வியர்வை ஊற்றெடுக்கிறது. உள்ளிருந்து வந்ததபின்தான் மூச்சு நிறையக் காற்றுக் கிடைத்த உணர்வு. வெளியில் வழிநெடுக வட்ட அடுக்கில், குச்சி குச்சியாய்...

Read More
புத்தகம்

ஒரு கடிதம், ஒரு கணக்கெடுப்பு

“பிரிட்டனில் பல ஏழைக் குழந்தைகள் சிறுவயதில் புத்தகம் கிடைக்காததால், வாழ்நாள் முழுவதற்கான வாசிப்பின்பம் கிடைக்காமல் தவறவிடுகின்றனர்.” என்று கவலைப்பட்டிருக்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் மைக்கேல் மார்பர்கோ. (Michael Morpurgo) எண்பது வயதான மைக்கேல், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் குழந்தை...

Read More
உலகம்

ஓராயிரம் குற்றங்களும் ஒரு குற்றவாளியும்

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. காஸாவில் இருபத்தியோராயிரத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருகிறது என்பது தென்னாப்ரிக்காவின் குற்றச்சாட்டு. கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு தங்கள் நாட்டுப் பொதுமக்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!