இந்த வருடத்தில் செய்த முதல் உருப்படியான விஷயம், எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. பதினாறு மணிநேர வகுப்பின் முடிவில் மெட்ராஸ் பேப்பரில் எழுதுவதற்காக ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டது. நன்றாக இருந்த நான்கு கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பேப்பரில் போட்டார் ஆசிரியர். அதில் என்னுடைய ‘அரபிக் கடலும்...
Author - காயத்ரி. ஒய்
![]()
“இப்போது சில பெரிய குடும்பங்களில் வெளிநாட்டிற்குச் சென்று திருமணங்களை நடத்தும் புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. இது அவசியமா? ஏன் இந்தியாவிலேயே இத்திருமணங்களை நடத்தக் கூடாது? அப்படிச் செய்வதால் அதற்கேற்ற அமைப்புகளும் வசதிகளும் இங்கு வளருமல்லவா? திருமணத்திற்குத் தேவையான பொருட்களை இங்கேயே வாங்குவதால்...
“ஹலோ… ரெயின் கோட் எடுத்துட்டு வந்திருக்கியா?” ஒரு வாரமாக தினமும் தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு சொட்டு மழையில்லை. இன்றுதான் காலையில் ‘இனிமேல் எதற்கு?’ என அலமாரியில் சொருகி வைத்தேன். “ஏன் மழை பெய்யுதா?” “தூறல் போடுது. அஞ்சரை மணியாச்சு, நீ இன்னும் கிளம்பலையா? கோட் வச்சிருக்கியா இல்லையா?”...
அயோத்தியில் சுமார் 1800 கோடி செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இராமர் கோயில் பணிகள், திட்டமிட்டபடி அடுத்த மாதத்துடன் நிறைவடைகின்றன. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோலாகலமாகக் குடமுழுக்கு விழா நடைபெறவிருக்கிறது. உயிர்களைக் காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு. உலகத்திற்கு...
தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக்...
பஸ் நிறைந்து வந்தது. ஏறியதும் இஞ்சினுக்கு அருகில் சீட்டின் மீது சாய்ந்து வாகாக நின்று கொண்டேன். சூடாக இருந்தாலும் இதுதான் பாதுகாப்பான பகுதி. கால் மிதிபடாது. லஞ்ச் பேக்கையும் கைப்பையையும் இருக்கையில் சுகமாக உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுத்தேன். தீபாவளி நெருங்குவதால், துணிமணி எடுப்பதற்காக டவுனுக்குக்...
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது நவராத்திரி. மரப்பாச்சிகள், கடவுள், காந்தி தாத்தா முதல் ஐபிஎல் செட் வரை விதவிதமான பொம்மைகளைப் படிகளில் அடுக்கி, சுற்றத்தாரை அழைத்து மகிழ்விக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஆந்திரப் பிரதேசத்தில் பொம்மலா கொலுவு என்றும், கர்நாடகாவில்...
புளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கண்டறியப்பட்டது 1930-ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு நாமெல்லாம் சூரியக் குடும்பத்தில் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் ஒன்பது கிரங்கள் என்றே படித்தோம். 2006-ஆம் ஆண்டு வான் விஞ்ஞானிகள், புளூட்டோ ஒரு தனிக்கோள் அல்ல, சூரியனைச் சுற்றி வந்தாலும் அதுவொரு குறுங்கோள் (Dwarf Planet)...
விநாயகரை வழிபட்டு வணங்கி எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குவது ஆதி காலத்திலிருந்தே நிலவிவரும் வழக்கம். கோயில் குடமுழுக்கில் தொடங்கிப் புது வீட்டுக்குக் குடி புகுவது வரையில் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் கணபதி ஹோமம் செய்தே தொடங்கி வைக்கப்படும். பெரிய நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகள் முதல் வீட்டு...
தெருக்கோடியில் ஐஸ் வண்டி மணியடித்துக் கொண்டு வரும்போதே அப்பா சொல்லிவிடுவார், ‘ஐஸெல்லாம் கெமிக்கல். தொண்டைல சதை வளரும்!’ சின்னத்தைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு டான்ஸில்ஸ் வளர்ந்து விட்டதாம். வாழும் உதாரணம் ஒன்றையும் சுட்டிக்காட்டிய பிறது என்ன செய்ய முடியும்? கோடை விடுமுறை நாட்களில் அனல் கங்காய் இறங்கும்...













