மத்தியக் கிழக்கில் அமெரிக்கா-இரான் போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதார அடித்தளங்கள் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிடும் என்ற அச்சத்தையும் கவலையையும் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பேச்சு உருவாக்கியிருக்கிறது.
‘இந்தியர்கள் இன்னும் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும்; வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முன்வர வேண்டும்; விவசாயிகள் வேதி உரப் பயன்பாட்டைச் சரிபாதியளவுக்குக் குறைக்க வேண்டும்; பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் (Work From Home)’ போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார் பிரதமர்.
நம் நாட்டின் பிரதமர் ஒருவர் இந்தியர்களைத் தங்கம் வாங்க வேண்டாம் என்று சொல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 1968இல் இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம், அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த இந்தியர்கள் தங்கக்கட்டிகளையும், தங்கக்காசுகளையும் வைத்திருக்கத் தடை விதித்தது. பிரதமர் மோடியோ மக்களிடம் அன்பாக வேண்டுகோள் மட்டும் விடுத்திருக்கிறார்.
















Add Comment