Home » நீ வேறு, நான் வேறு – 9
நாள்தோறும் • பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 9

9. மேலிருந்து கீழ்; வலமிருந்து இடம்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளுக்கும் ஆப்கனிஸ்தான் முல்லாக்களுக்கும் இடையில் நடந்த முதல் யுத்தம் கிட்டத்தட்ட நான்கு வருட காலத்துக்கு நீடித்தது. உலகம் எதிர்பாராத மாபெரும் திருப்பமாக அந்தப் போரில் பிரிட்டன் தோல்வியடைந்தது.

போர் தொடங்கிய வேகத்தில் காபூலைக் கைப்பற்றி, ஷா ஷுஜாவை அவர்கள் ஆட்சியில் உட்கார வைத்தது உண்மை. ஆனால் தோஸ்த் முஹம்மதின் படையினரும் சரி; பெரும்பாலான ஆப்கன் மக்களும் சரி. அந்த மாற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி எதிர்பார்த்தது, அங்கே ஒரு நிரந்தர அடிமை ஆட்சி. ஆனால் அவர்களால் நம்ப முடியாத அளவுக்கு மக்கள் நாடெங்கும் அந்த பொம்மை ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் பிரிட்டன் படைகளால் அதைத் தாங்கவே முடியாமல் போய் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிவிடவே முடிவு செய்தார்கள். ஆனால் அதற்குக் கூட வழியின்றிக் காபூல் மக்கள் அங்கிருந்த பிரிட்டிஷ் படையினரில் ஒருவரைக் கூட மிச்சம் வைக்காமல் மொத்தமாகக் கொன்று தீர்த்துவிட்டார்கள்.

பழங்குடி கெரில்லாக்களின் பேயாட்டம் என்றால் அது. அப்போதுதான் ஆப்கனிஸ்தானை உலகம் முதல் முதலாக எப்பேர்ப்பட்ட தாதா என்று வியந்து பார்த்து, ‘சாம்ராஜ்ஜியங்களின் கல்லறை’ என்று அழைக்க ஆரம்பித்தது. மறுபுறம் பிரிட்டன் தோற்றிருக்கிறது. அது சாதாரண அவமானமல்ல. ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தின் அவமானம். உலகையே கட்டியாளும் வல்லமை தனக்கு மட்டுமே உண்டு என்று இங்கிலீஷ் ஓக் உயரத்துக்குத் தலையை நிமிர்த்தியபடியே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் அல்லவா? அந்த எதிர்பாராத பெருந்தோல்வியில் நிலைகுலைந்து போனார்கள்.

ஆனால் காட்டிக்கொள்ள முடியாது. விட்டுக் கொடுக்கவும் முடியாது. என்றைக்காவது இன்னும் தீவிரமான, மேலும் உக்கிரமான, பிரிட்டிஷ் படைகளின் சரித்திரத்தில் ஒரு தனிச் சிறப்பு அத்தியாயமாக எழுதும் அளவுக்கு மாபெரும் வெற்றியை இறுதி வரியாகக் கொண்ட தாக்குதல் காண்டத்துக்குத் தயாராகப் பார்ப்பார்கள் என்று அனைவருமே நினைத்தார்கள். மற்றவர்களால் நினைக்க மட்டுமே முடியும். பலூச்சிகளுக்கு மட்டும் அது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!