இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி. இவர் இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார்.
லெப்டினென்ட் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இந்திய ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். தற்போது பாதுகாப்புப் படையின் உயரிய பதவியான முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பணி நியமனம், ராணுவ கட்டமைப்பு முறையை நவீனமாக்குவதற்கான முயற்சி எனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தேசியப் பாதுகாப்புக்குத் தரைப்படை, விமானப் படை, கப்பல் படை ஆகியவை உள்ளன. அவசரத் தேவையின்போது இம்மூன்று படைகளையும் முழுமையாக ஒருங்கிணைக்க இயலவில்லை. முப்படைகளுக்கும் திட்டமிடல், தளவாடங்கள் கொள்முதல், திறனை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு அரசுக்கு ஒரே பகுதியிலிருந்து ஆலோசனை தேவைப்பட்டது.















Add Comment