பிரேசிலின் ஓர் ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில், மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கண்டபோது விஞ்ஞானிகளுக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டது. சீராக வடிவமைக்கப்பட்ட சாலைகள், காற்றோட்டமான அறைகள், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் என்று விரிந்து கிடந்த அந்த மெகா சிட்டியைப் பார்த்த எவருக்கும் ஒரு சந்தேகம் எழுவது நியாயம்தான்.
இவ்வளவு துல்லியமான, தொழில்நுட்ப நேர்த்தியுடன் கூடிய இந்த நகரத்தை உருவாக்கியது யார்? பதில் ஆச்சரியமானது. ஆம், இந்த மெகா சிட்டியை உருவாக்கியது ஏலியன்களோ மனிதர்களோ அல்ல. நம் காலடியில் ஊர்ந்து செல்லும் எறும்புகள்.
பிரேசிலின் தெற்குப் பகுதியில், மனித நடமாட்டம் குறைந்த கார்வெய்ரோஸ் (Cerveiros) என்ற புல்வெளி நிலப்பரப்பில், அது ஒரு சாதாரண எறும்புப் புற்று போலக் காட்சியளித்தது. ஆனால், அந்தப் பகுதியில் தரைமட்டத்தில் காணப்பட்ட மணல் குவியல்கள் ஆராய்ச்சியாளர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பின. ஒரு பெரிய சுரங்கத்தைத் தோண்டினால் எவ்வளவு மண் வெளியே வருமோ, அவ்வளவு மண் அங்கே குவிக்கப்பட்டிருந்தது. ‘இவ்வளவு மண் வெளியே வந்திருக்கிறது என்றால், கீழே எவ்வளவு பெரிய பள்ளம் அல்லது கட்டமைப்பு இருக்க வேண்டும்?’ என்ற கேள்விதான் முதல் பொறியைத் தட்டியது.















Add Comment