அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரான் மீதான தாக்குதல், தொடக்கத்தில் இந்தியர்களுக்கு ஒரு சர்வதேசச் செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால், போர் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இந்தியப் பங்குச்சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியபோது, அது முதலீட்டாளர்களின் கவலையாக மாறியது. தற்போது, போர்ச்சூழல் ஹோர்மூஸ் நீரிணையை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில், அதன் தாக்கம் சாமானிய இந்தியர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மத்தியக் கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட்டு ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட்டாலும்கூட, நிலைமை முழுமையாகச் சீரடையப் பல மாதங்கள் ஆகலாம் என்று எச்சரித்துள்ளார். இதே சூழலைக் குறிப்பிட்டுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.















Add Comment