Home » உரி – 70
உரி நாள்தோறும்

உரி – 70

70. உள்ளம் பதுங்கும் இடம்

சித்தனே, தீய சக்தியென்று நீயும் உன் குருநாதனும் எதனைச் சொல்கிறீர்கள் என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. நிச்சயமாகவே இம்மண்ணில் இல்லாத பேய் பிசாசுகளையா, அவற்றை ஏவித் தமக்கு வேண்டியதைச் செய்துகொள்வதாகச் சொல்லிக்கொள்ளும் பித்தலாட்டக்காரர்களையா என்று அறியேன். ஒரு மனிதன் மரித்தால் உடல் சாம்பராகிறது. உயிர் வளி, வெளி நிறைத்த வளியோடு கலக்கிறது. இதற்கு மேலே இதில் எந்தத் தத்துவமும் இல்லை, தரிசனமும் இல்லை. ஆனால் உண்மையான தீய சக்திகள் வேறு பல உண்டு.

இப்போது இப்பாண்டத்தில் உள்ள நீரில் நீயும் நானும் கண்ட பாரதாய தத்தனை நாம் விசாரணைக்கு எடுப்போம். சம்மதமா?

உன் விருப்பம் சார்வாகனே. அவனைக் குறித்துத்தானே பேசிக்கொண்டிருந்தோம்?

என்று உதுமானி நாயனார் சொன்னார். சார்வாகன் சில நொடிகள் கண்மூடி அமைதியாக இருந்தான். பிறகு மீண்டும் பேசத் தொடங்கினான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!